Ads (728x90)

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

பிரேசில் ஜனாதிபதி ஜாயிர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget