யாழ்.அராலி ஓடைக்கரைகுள கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்.வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர் ஓடைக்கரைகுளம் தடுப்புச் சுவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கட்டுமானப் பணிக்கான நிதியை விடுவிக்குமாறு, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரின் எத்தரவிற் அமைய அராலி ஓடைக்கரை குளத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 6.705 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment