மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயத்தின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸாரினால் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சச்சிதானந்தம்
சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் ஈடுபடுகின்றார். சைவக் கோயில்களை அவமதிக்கும் வகையில் அவருடைய தேர்தல் சுவரொட்டிகளை சைவக் கோயில் கருவறையில் ஒட்டியுள்ளனர்.
கருவறை என்பது சைவர்களுடைய நம்பிக்கைக்குரிய இடம்.
கருவறையிலேயே சுமந்திரன் தன்னுடைய தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் சைவ சமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
தேர்தல் விதிமுறைகளையும் மீறி மக்களுடைய நம்பிக்கையையும் உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தினை உயர்த்தும் முகமாக கோயில் கருவறையிலேயே தேர்தல் சுவரொட்டிகளை 26 ஆம் திகதி இரவு ஒட்டிருக்கிறார்.
இதை வன்மையாக கண்டிப்பதோடு அவரிடம் நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். அத்தோடு இந்த வீட்டுக்கு பொறுப்பான கட்சித் தலைவருக்கு எதிராகவும், அத்தோடு சாவகச்சேரி தொகுதி வீட்டுக்கு பொறுப்பானவருக்கு எதிராகவும் வழக்கினை பதிவு செய்யவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment