பிரான்ஸின் மேற்கு பிராந்தியத்தின் நன்ரெஸ் நகரிலுள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இராயப்பர், சின்னப்பர் பேராலயத்தில் தீ பற்றியுள்ளது. இப்பேராலயத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் பரவய தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூர் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
15 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த பேராலயத்தில் ஏற்பட்ட தீயினால் பேராலயத்தின் அலங்கார வேலைப்பாடுகள், வண்ணமயமான கண்ணாடி ஜன்னல்கள் என்பன சேதமாகியுள்ளன. எனினும் பேராலயத்தின் கூரையில் தீ பற்றவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் குண்டுத்தாக்குதலின் போதும் இந்த தேவாலயம் எரிந்து பகுதியளவில் சேதமடைந்தது. 1972 இல் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை முற்றுமுழுதாக சேதமடைந்தது. 13 வருடங்களின் பின்னரே பேராலயம் புனரமைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment