Ads (728x90)

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்கான கொடியேற்றம்  ஜூலை மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தீமிதிப்பு வைபவம் ஜூலை 31ஆம் திகதி வெள்ளியன்று நடைபெறும்.
அதேவேளை ஆடிவேல் விழா உற்சவத்தின் இறுதி மகாபெரஹரா ஊர்வலம் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற வருடாந்த தீர்த்தோற்சவம் மறுநாள் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும்.

கன்னிக்கால் நடப்பட்டு 45 தினங்களின் பின்னர் கொடியேற்றம் நடைபெறுவதும் அதுபோல கொடியேற்றம் நடைபெற்று 15 தினங்களில் தீர்த்தோற்சவம் நடைபெறுவதும் பாரம்பரிய வழக்கமான நடைமுறைகளாகும்.

எனினும் சமகால கொரோனாச் சூழலில் ஆலய ஆடிவேல்விழா உற்சவம் எவ்வாறான நடைமுறைகளில் நடாத்தப்படுமென்பது தொடர்பான இறுதி முடிவு மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இம்முறை கொரோனா சுகாதார நடைமுறைக்குச் சாதகமாக பாதயாத்திரைக்கு அனுமதியளிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தீர்மானம் மொனராகலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் திணைக்களத்தலைமைகளுடன் நடாத்தப்படும் பிரதான கூட்டத்தில் தீர்மானிக்கப்படுவது வழக்கம். அங்குதான் காட்டுப்பாதை திறக்கப்படுவது குறித்தும் அறிவிக்கப்படுவது வழக்கம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget