Ads (728x90)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் சிலர் அண்மைக்காலமாக காட்டமான கருத்து தெரிவித்து வருவது ஒரு நாடகம். கூட்டமைப்பை பற்றி பெரமுனவும், பெரமுனவை பற்றி கூட்டமைப்பும் மாறி மாறி கருத்து தெரிவிப்பது இரகசிய உடன்படிக்கையின் கீழேயே என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் யாழ். உடக மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை பற்றி பெரமுனவும், பெரமுனவை பற்றி கூட்டமைப்பும் மாறி மாறி கருத்து தெரிவிப்பது, இப்படி பேசினால் தெற்கில் அவர்கள் வாக்கு பெறலாம். அதேவேளை வடக்கில் அவர்கள் விரும்பும் கூட்டமைப்பினர் வெற்றியடையலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டுமென ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு காரணமுள்ளது. எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச பொறியில் சிக்குவதற்காக வாய்ப்புள்ளது. நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச பொறியிலிருந்த தப்பிக்க, தமிழ் தேசிய கூட்டமைப்ப உதவியதை போல, எதிர்காலத்தின் மஹிந்த ராஜபக்சவும், அவரது கட்சியினரும் பெற்றுக்கொள்ள விரும்புவதை போல தெரிகிறது.

இலங்கையின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடக்கவிருந்த நிலையில், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், பயணத்தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் எப்படி இலங்கையை பாதுகாத்தது என்பதை பற்றி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பில்லாமல் சர்வதேச நெருக்கடிகளிலிருந்து நல்லாட்சி அரசு தப்பித்திருக்கவே முடியாது. எனவே ராஜபக்ச அரசும் சர்வதேச நெருக்கடியிருந்து தப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி அவசியமாக உள்ளது.

வெளிப்படையாக இரண்டு தரப்பும் மோதிக்கொள்வதை போல கருத்தை சொன்னாலும், இரண்டு தரப்பும் இரகசிய தொடர்பில் உள்ளனர். தேர்தலி
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 2 தடவைகள் ஆதரவு கோரி ராஜபக்சக்கள் என்னை தொடர்பு கொண்டனர். நான் கொடுத்த பதிலின் மூலம் அவர்கள் என்னை அறிந்திருப்பார்கள்.

அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து, கோட்டாபய அரசாங்கம் செயற்படவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சு பதவியை கொடுத்து தம்முடன் வைத்திருக்க பெரமுன விரும்புகிறது. அதன் எதிரொலிதான் அண்மையில் அமைச்சு பதவியை பற்றி சுமந்திரன் தெரிவித்தது என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget