Ads (728x90)

பிரான்ஸ் நாட்டின் மாநகரசபை துணைமுதல்வராக இலங்கைத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் இரண்டாம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez யோடு இணைந்து 50.84% வாக்குகளப் பெற்று நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

யாழ்ப்பாணம்-கொழும்புத்துறையை சேர்ந்த செல்லப்பா மகேந்திரன் தேவி தம்பதிகளின் புதல்வியான சேர்ஜியா பிரான்ஸின் சட்டத்துறையில் பட்டம் பெற்று ஒரு சட்டத்தரணியாக பணியாற்றுபவராவார்.

இளவயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்டு செயல்படும் இவரது மக்கள் நல பணிகளால் இவர் வாழும் கார்ஜ் லி கொணேஸ்(Garges les Gonesse) மட்டுமல்லாது அயல் கிராமங்களான சார்சேல் (sarcelles), டுனி (Dugny) போன்ற கிராமங்களில் வாழும் பலரும் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாநகரசபைத் தேர்தலில் ஆதி பரமேஸ்வரி சதாசிவம் (பாண்டிச்சேரி) மற்றும் கார்த்திக் சந்திரமூர்த்தி ஆகியோரும் மாநகரசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget