சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்களில் வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும், ஊடக அமைச்சருமான பந்துல குணவர்த்தன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
குறித்த வதந்திகள் தொடர்பில் யாரும் கவலைப்பட வேண்டாம். மாறாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி நிவாரணம் மேலும் அதிகரிக்கப் பட்டிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகள் தங்களின் வாழ்க்கையில் இளமை காலத்தை நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணித்தவர்கள். இவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான விசேட வட்டி வீதம் எனும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் இதனை ஆரம்பித்து வைத்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட வட்டி வீதத்தில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. அது ஆரம்பிக்கப்பட்டது முதல் செயற்பட்ட பிரகாரமே தொடர்ந்து செயற்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment