கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தலில் நேற்று மக்கள் வாக்களித்தனர். கொரோனாவுக்கு மத்தியில் தேர்தலை நடத்திய ஒரு சில நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாக உள்ளது.
பெருந்தொற்றுக்கு மத்தியில் கூட்டங்கள் கூடுவது மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது ஆபத்தாக இருக்கும் சூழலில் கடந்த சில மாதங்களில் ஒரு சில நாடுகளே தேசிய தேர்தல்களை நடத்தியுள்ளன. கடந்த ஏப்ரலில் தென் கொரியாவிலும் ஜூன் இறுதியில் செர்பியாவிலும் தேர்தல் இடம்பெற்றன.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இடம்பெற்ற சிங்கபூர் பொதுத்தேர்தலில் ஆளும் மக்கள் செயற்பாட்டுக் கட்சி (PAP) மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. ஆனால் பெரும்பான்மையை இழந்துள்ளது.
1965 முதல் ஆட்சியிலுள்ள மக்கள் செயற்பாட்டுக் கட்சி 93 பாராடாளுமன்ற இடங்களில் 83 இடங்களை 61.2 சதவீதம் வாக்குகளால் வென்றுள்ளது.
தற்போதைய பிரதமர் லீ ஷசின் லூங் மீண்டும் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
வாக்காளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட்டு நேரத்திற்கு வாக்களிப்பதற்கான இடங்கள் அளிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடன் வாக்களிப்பு இடம்பெற்றது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சிங்கப்பூரில் 45,000 க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.
நாட்டின் ஸ்தாபக தந்தையும், நீண்டகால ஆட்சியாளருமான லீ குவான் யூவின் மகன் லீ ஷசின் லூங் 2004 முதல் பதவியில் இருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment