இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழி நடத்திய தலைவர் பிரபாகரனை என்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆபிரஹாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது எமது மாவீரர்களின் தியாகத்தைக் கணக்கிலெடுக்காத தோற்றத்தைக் கொடுத்து விடும் என்பதைப் பணிவுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எமது தேசியத் தலைவரால் அடையாளப்படுத்தப்பட்ட கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. சரியோ பிழையோ அதற்கு வாக்களிப்பது என்பது எமது கடமை எனக் கணிசமானோர் கருதுகின்றனர். இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.
மாவீரர் அறிவிழியின் அப்பாவாக நான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் சங்கர் உட்பட இந்தப் போராட்டத்தில் ஆகுதியாகிய வடக்கு – கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாவீரர்கள், தளபதிகளின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற வகையில் மாவீரருக்குச் செய்யும் கௌரவமாக சுமந்திரனின் எதிர்பார்ப்பைத் தோற்கடிக்கும் பணியில் கைகோர்க்கும்படியாக அன்புடனும், உரிமையுடனும் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Post a Comment