Ads (728x90)

பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணத்தை பயன்படுத்தும் புதிய சட்டத்தை விரைவில்
அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், பாடசாலை வேன் சேவை சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
.
அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்திற்கு அமைய அனைத்து பாடசாலை வேன்களும் மஞ்சள் வர்ணத்தில் அமைந்திருக்க வேண்டும் எனும் யோசனையை  அமைச்சர் முன்வைத்தார். தற்போது எமது நாட்டிலுள்ள வீதிகளில் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்களுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை.

பார வாகனங்கள், பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு அருகிலேயே பயணிப்பதனால் சிறுவர்கள் பயப்படும் நிலை ஏற்படுகின்றது. இது சில வேளைகளில் விபத்தாகவும் அமைந்து விடுவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் உலகில் பல்வேறு நாடுகளிலும் பாடசாலை மாணவர்கள் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன. நாட்டின் எதிர்காலம் அவர்களே என்பதனால் அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அந்த அரசாங்கங்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்றும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு பாடசாலை வேன்கள் சேவை  சங்கங்களின் பிரதிநிதிகளும், பொலிஸ் அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget