Ads (728x90)

வட மாகாணத்தின் பிரதான வீதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தவதுடன், கனரக வாகனங்கள் பயணிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை விதிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

வட மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துக்கள் மற்றும் சட்ட ஒழுங்குகளின் நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்  வட மகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

அக்கலந்துரையாடலில் வடமாகாணத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகள், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வடமாகாணத்தில் அண்மைய தினங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஆளுநர், தொடர்ச்சியாக விபத்துச் சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் தொடர்பிலான விளக்கங்களை கோரியிருந்தார். இதன்போது இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்பதையும்
திட்டவட்டமாக அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிலையில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சாலை விபத்துக்களை தவிர்த்து அதனூடாக ஏற்படும் உயிர் இழப்புக்களைத தடுப்பதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் எடுக்குமாறு
சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget