உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த வரிசையில் முக்கிய இடம் வகிக்கின்றது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை விரைவாக கண்டறியும் பணியில் இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. எலிகள், முயல்கள் போன்ற விலங்குகளில் இந்த தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதன் தரவுகள் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த இரண்டு மருந்துகளுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரம் தன்னார்வலர்களிடம் மருத்துவ பரிசோதனையை செய்து வருகின்றனர். இந்த பரிசோதனைகளில் நிபுணர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். முடிந்த வரை துரிதமாக தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதை தார்மீக கடமையாக கொண்டு செயலாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment