நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் மீளத் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து பாடசாலை நேரம் வழமைக்குத் திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதாவது செப்டெம்பர் 01 இலிருந்து அனைத்து வகுப்புகளுக்குமான பாடசாலை நேரமானது காலை 7.30 இலிருந்து பகல் 1.30 வரையிலான பழைய நிலைக்கு திரும்பும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது தரம் 10 – 13 வகுப்புகளுக்கான பாடசாலை நேரமானது காலை 7.30 இலிருந்து மாலை 3.30 வரை நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment