தமிழக அரசு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் அவற்றுக்கு உதவும் வகையில் முதல்வர் பழனிசாமி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதற்கு முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா 30.03.2020 இல் 05 கோடி ரூபாவையும், இதனை தொடர்ந்து மேலும் 05 கோடி ரூபாவுமாக மொத்தமாக 10 கோடி ரூபாவை நிதியுதவியாக அளித்துள்ளது.

Post a Comment