மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்து ஜனாதிபதி வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பட்டதாரிகள் தங்களது முறைப்பாடுகளை ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதனை செவிமடுத்த ஜனாதிபதி அனைவருக்கும் தொழில்வாய்ப்பு கிடைக்கும். வெய்யிலில் காயாமல் வீட்டு செல்லுங்கள் என தெரிவித்தார்.
அத்துடன் மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment