Ads (728x90)

கொவிட்-19 வைரஸ் பரவல் நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரச பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை மீண்டும் வழமை போன்று ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய பாடசாலைகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கும் அதிகமாக இருந்தாலும், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி, மாணவர் இடைவெளி மற்றும் சமூக இடைவெளியை பேண முடிதல், போதுமான  வகுப்பறைகள், போதியளவான ஆசிரியர்கள் காணப்படுமாயின் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்கும் நோக்கில் அனைத்து தரங்களுக்கும் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள், மாகாண செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலய கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனா தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget