ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான திரு.மஹிந்த ராஜபக்ஷ 1970 ஆம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத்தில் பிரவேசித்தார். அவர் இன்று நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்கிறார்.
அவர் தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற அங்கத்தவராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றியுள்ளார். அது தவிர இரண்டு தடவைகள் மக்களால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று தடவைகள் பிரதமராக கடமையாற்றியிருந்தார்.
இன்றைய சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள் பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமைக்கு உரியவராகின்றார்.
Post a Comment