2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்த தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்கள இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகளை, www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை விடைத்தாள் மீளாய்விற்காக 61,248 பேர் விண்ணப்பித்ததாக அவர் தெரிவித்தார். 2019 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment