Ads (728x90)

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் மன்னாரில் 144 தொடர் குடியிருப்புக்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையுடனான தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் வீடமைப்பு திட்டங்களுக்கான உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கி வருகின்றது. அதன்படி 33 பில்லியன் ரூபா நிதியுதவியில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பெருந்தோட்டப்பகுதியில் 11 பில்லியன் ரூபா செலவில் மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதுவரையில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியினளவு 517 பில்லியன் ரூபா என்பதுடன், அதில் 92 பில்லியன் ரூபா நிதியுதவியாகவும் 425 பில்லியன் ரூபாகடனுதவியாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget