வங்கிகளால் வழங்கப்படும் கடனட்டைகளுக்கான உயர்ந்த பட்ச வட்டி வீதத்தை 18 சதவீதமாகக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற மத்திய வங்கியின் நாணயச்சபைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தங்கக்கடன் அடகு வட்டி வீதம் 10 வீதமாகவும்,
வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி வீதம் 16 வீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தற்போதைய கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய நிலையான வைப்புக்கான வட்டி 4.5 வீதமாகவு, நிலையான சலுகை கடன் வட்டி வீதம் 5.5 வீதமாகவும் காணப்படுகின்றது. சட்டரீதியான இருப்பு வீதம் 2 வீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளை சந்தைக்கடன் வழங்கல் வீதங்கள் இன்னமும் முழுமையாகப் பிரதிபலிக்காமையினால், தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையைத் தொடர வேண்டிய அவசியத்தயும் நாணயச்சபை அங்கீகரித்திருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment