Ads (728x90)

ஆப்பிள் நிறுவனத்தின் வழிமுறைகளை பின்பற்ற தவறியதால் சீன ஆப் ஸ்டோரிலிருந்து 29,800 செயலிகள் நீக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம், ‘கேம் டெவலப்பர்’ எனப்படும் மொபைல் போனில் தரவிறக்கம் செய்யப்படும் விளையாட்டுகளை உருவாக்குவோருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

அதன்படி கேம்களை பதிவேற்றுவதற்கு முன், அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும், அதற்கான உரிம எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதற்காக ஜூன் வரை அவகாசமும் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு அந்த செயலிகள் சென்றடைய வேண்டும் என்றால் இந்த வழிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழிமுறைகளை பின்பற்ற தவறிய டெவலப்பர்களின் செயலிகளை நீக்கும் நடவடிக்கைகளை கடந்த ஜூலை முதல் ஆப்பிள் நிர்வாகம் தொடங்கியது. ஜூலை முதல் வாரத்தில் 2,500க்கும் மேற்பட்ட செயலிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் உத்தரவுக்கு அடிபணிய மறுத்துள்ள சீன கேம் டெவலப்பர்கள் மீதும் ஆப்பிள் நிர்வாகம் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. சீன ஆப் ஸ்டோரில் இருந்து, 29,800 செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது. இதில் 26,000 மேற்பட்டவை கேம்கள் என தெரியவந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget