Ads (728x90)

இந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடரை இம்முறை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடாத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதை தொடர்ந்து இத்தொடரை இந்தியாவிலிருந்து மாற்றி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடாத்த போட்டி ஏற்பாட்டுக்குழு முன்வந்துள்ளது.

இப்போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இத்தொடரின் 53 போட்டிகளும் டுபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மைதானங்களில் இடம்பெறவுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் காரணமாக இந்தியன் பிறிமியர் லீக் தொடரின் பல போட்டிகள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget