இலங்கையின் தடகள வீராங்கனை ஹிருனி விஜேரத்ன 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் முன்னைய சாதனையை முறியடித்து, புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெற்ற இப்போட்டியில் பங்கு கொண்ட ஹிருனி 16 வினாடிகள் 17.51 செக்கன்களில் கடந்து இச்சாதனையை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கை இராணுவ விளையாட்டுப் போட்டியில் நீலானி ரத்நாயக்க பதிவு செய்த சாதனையான 16 நிமிடங்கள் 17.82 வினாடிகள் என்ற சாதனையையே ஹிருனி முறியடித்தார்.
இந்த வெற்றியின் பின்னர் ஊடகங்களுடன் பேசிய ஹிருனி , நான் எதிர்காலத்தில் ஒரு பெரிய சவாலை சமாளிக்க வேண்டும். அதாவது அடுத்த செப்ரெம்பரில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மராத்தான் போட்டிக்கு தகுதி பெறுவது. அங்கு நடைபெறவுள்ள 10,000 மீட்டர் நிகழ்விலும் கவனம் செலுத்துகிறேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஹிருனியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவரது சாதனையை பாராட்டியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment