வரலாற்று பிரசித்தி வாய்ந்த யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்திருவிழா இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற் கொண்டு நல்லூர் தேர் உற்சவத்தில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரச அதிபர் க. மகேசன் பக்தர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்பொழுது பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர், பொலிசார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் சுகாதார ஆலோசனைகளை பக்தர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அதனடிப்படையிலே சுகாதார நடைமுறைகளை பேணி, சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் உற்சவங்களில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே சமூகத்தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த தடவை நல்லூர் ஆலய தேர் உற்சவத்தில் பெருமளவில் கலந்து கொள்ளாது, சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப தங்களுடைய பிரசன்னத்தை குறைத்து, ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக செயற்பட வேண்டியது ஒவ்வொருவருடையதும் கடமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment