Ads (728x90)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 373 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்த இலங்கையர்கள் 332 பேரும்,  பிரித்தானியாவிற்கு தொழில் வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காகச் சென்றிருந்த 41 பேரும், வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 13 பேரும்  இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்ததும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்த இலங்கையர்கள் 335 பேரை ஏற்றிய விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வெள்ளி இரவு  வந்தடைந்தது. நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 648 எனும் விமானத்தில் அவர்கள் இலங்கையை வந்தடைந்தனர். இதேவேளை கட்டாரிலிருந்து இலங்கையர்கள் 14 பேர் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget