Ads (728x90)

இன அடிப்படையில் நாட்டை பிரிக்க வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சண்டே ஒப்சேவருக்கான பேட்டியில்  தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை பயன்படுத்தி பெற முடியாமல் போனதை பெறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது. எங்கள் அரசாங்கத்தின் கீழ் தனிநாட்டுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசத்தை பாதித்த பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடித்தோம் என குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச, அனைத்து சமூகத்தவர்களும் ஐக்கியத்துடனும், அமைதியுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளும், பயங்கரவாதமும் நிரம்பிய இருண்ட யுகத்தை சிலர் மறந்துவிட்டனர் என தெரிவித்த அவர், 1980 கிளர்ச்சியின் போது 60,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இன்னொரு கிளர்ச்சி ஏற்படுவதை தடுப்பதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாகயிருக்க வேண்டும் என விரும்பினால் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கு பதில் தமிழ் சமூகத்தின் பரந்துபட்ட நன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget