நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரி சலுகை நிவாரண பொதி இன்று முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.
இதற்கமைவாக பொருளாதார சேவைகள் கட்டண வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான நிறுவனங்களின் பற்று வரி, பங்கு சந்தை வருமானத்தின் அடிப்படையில் அறவிடப்படும் மூலதன வரி, வருமானத்திற்கான வரி, சேவை வரி ,சேமிப்பு வருமானம் மீதான வரி 28 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு வரியும் 25 சதவீத குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment