கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை ஒக்டோபரில் போட திட்டமிடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment