விசேட பூசையில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார். இம்முறை இடம் பெற்ற தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை.
சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர். இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 09 ஆசனம் பெற்று வெற்றியீட்டியுள்ளோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
மேலும் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வு வழங்கப்பட வேண்டும். அதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் ஆட்சி அமைக்கும் அரசின் நிலைபாட்டை கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம் என ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்தார்.
Post a Comment