Ads (728x90)

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும். சுமந்திரன் தேசியப்பட்டியலில் தெரிவாகட்டும் என இன்று காலை 10.00 மணி தொடக்கம் சாவகச்சேரியில் ரவிராஜ் முன்றலில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் போராட்டம் குறித்து சசிகலா ரவிராஜிடம் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு தற்போது கருத்துத் தெரிவிக்க விரும்பாதபோதும் அவருடன் கலந்துரையாடிய நிலையில், கட்சியின் தலைமைகளுடன் கதைத்துள்ளேன். இது குறித்து அவர்கள் தான் முடிவு செய்வார்கள். ஆதரவாளர்களின் எண்ணங்களில் தான் எனது வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டது. இறுதி வரை அவர்கள் நம்பிக்கை பலமாக இருந்த நிலையில் என்னுடைய வாய்ப்பு, பின்தள்ளப்பட்ட பெறுபேறு மூலம் அதிர்ச்சியை தந்தது. இந்த அதிர்ச்சியை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் மத்திய கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை உள்ளே இறக்கப்பட்டமை குறித்து தான் நான் சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேனே தவிர பெறுபேறு குறித்து அவரை நான் குறிப்பிடவில்லை. அழுத்தம் பிரயோகிப்பதாக குறிப்பிடப்பட்டமை தவறு அவ்வாறு எனக்கு அழுத்தம் தரப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget