Ads (728x90)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட முறை தவறானது என்பதை இலங்க தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது. இந்த விவகாரத்தை வரும் 29ஆம் திகதி வவுனியாவில் நடக்கும் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டது. இதன்போது
அம்பாறைக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டது குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அது வழங்கப்பட்ட முறை தவறானது என்பதை மாவை சேனாதிராசா, கே.வி.தவராஜா, குலநாயகம் ஆகியோர் தெரிவித்தனர். கட்சி தலைவரான தனக்கு தெரியாமலே செயலாளர் நடந்து கொண்டது தவறு என்பதை மாவை சுட்டிக்காட்டினார்.

இச்செயற்பாடு அடிப்படை நெறிமுறைகளிற்கு முரணானது. இதன் பின்னணி யார் என்பதை முறையாக கண்டுபிடித்து நடவடிக்கையெடுக்க வேண்டும் என கே.வி.தவராசா வலியுறுத்தினார். தேசியப்பட்டியல் விவகாரத்தில் தொடர்புபட்டிருந்த எம்.ஏ.சுமந்திரன் அணியினர் இதன்போது மௌனமாக உட்கார்ந்திருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget