Ads (728x90)

நாட்டின் சகல பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் போதனை சாரா ஊழியர்கள் அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் முழுமையாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  மாதாந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் பலர், கொரோனா நோய்ப் பரவலைக் காரணம் காட்டிப் பணிக்குத் திரும்பாத விடயம் பற்றி ஆராயப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தின் பின்பு பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் பலர் முழுமையாகப் பணிக்கு திரும்பாத நிலமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை கிடைக்கவில்லை எனக் காரணம் கூறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget