200 மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வரையறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
200 க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் வேறுபட்ட வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் வெவ்வேறான தினங்கள் கல்வி நடவடிக்கைகளிற்காக ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இவ்வரையறையில் தளர்வை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார சிபாரிசுக்கு அமைய பாடசாலைகளை முன்னெடுக்க முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை அழைப்பதற்கு பாடசாலை அதிபர்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்று பரவும் நிலை தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment