Ads (728x90)

ஆறு வருட காலத்தின் பின்னர் வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இதன் முதலாவது தொகுதி உற்பத்திகளான சுமார் நாற்பது தொன் எடையுள்ள கனமான கடதாசி விற்பனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காகித ஆலையின் உதவி முகாமையாளர் சபாபதிப்பிள்ளை அம்பிகாவதி தெரிவித்தார்.

1951 ஆம் ஆண்டு நிருமாணிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலையில் 1966 ஆம் ஆண்டு தொடக்கம் வைக்கோலைக் கொண்டு கடதாசி உற்பத்தி செய்யும் நடவடிக்கை நடைபெற்றது. இங்கு சுமார் நான்காயிரம் பேர் வரை பணியாற்றினர். பின்னர் கடதாசிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதையடுத்து உள்ளுர் உற்பத்திகளுக்கு போதியளவு சந்தைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் 2014 ஆம் ஆண்டில் உற்பத்திகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டன.

2016ம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் பலர் இழப்பீட்டினைப் பெற்றுக் கொண்டு ஓய்வு பெற்றனர். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட திட்டத்திற்கமைவாக கடதாசி ஆலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget