இலங்கை முழுவதும் நேற்று மின்சாரம் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் டளஸ்அழகபெரும தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இந்த குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவம் மீள நிகழாமையை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று நண்பகல் 12:35 மணியளவில் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டமை காரணமாக இன்றைய தினம் ஐந்தரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment