ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும்போது அனைத்து கிராம சேவை பிரிவுகளிலும் இருந்து வறுமை நிலையிலுள்ளவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சேவையில் நிலவும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை ஒழிக்கும் வகையில் தொழிலில் உள்ளவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
தலைமைத்துவம், இலக்கை அடைதல், நம்பிக்கை உணர்வு என்ற விடயங்களை முக்கியத்துவப்படுத்தி ஒரு வருட கால பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். புதிய இராஜாங்க அமைச்சுக்களின் இலக்கை அடைந்து கொள்வதற்காக தொழில் பெற்ற பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Post a Comment