Ads (728x90)

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் அக்கட்சி ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி ஈட்டியுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் 68,53,693 (59.09%) வாக்குகளை பெற்று இந்த வெற்றியை அடைந்துள்ளது. மொத்தமான 225 ஆசனங்களில் 2/3 பெரும்பான்மைக்கான 150 ஆசனங்களை பெறுவதற்கு மேலும் 5 ஆசனங்கள் பெற வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (02 ஆசனங்கள்), ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி (01 ஆசனம்), தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (01 ஆசனம்), தேசிய காங்கிரஸ் (01 ஆசனம்) உள்ளிட்ட கட்சிகள் இணைவதன் மூலம் அதனை அடையும் வாய்ப்பும் எட்டியுள்ளது.

196 விகிதாசார தேர்தல் முறை மூலமான ஆசனங்களில் 128 ஆசனங்களையும், தேசியப் பட்டியில் மூலமான 25 ஆசனங்களில் 17 ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 27,71,984 (23.90%) வாக்குகளைப் பெற்று 47 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 07 ஆசனங்கள் உள்ளடங்கலாக 54 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 4,45,958 (3.84%) வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி எந்த ஒரு ஆசனத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget