இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்கும் என
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி இலங்கை மக்கள் தங்கள் அடிப்படை ஜனநாயக உரிமையை பயன்படுத்தினார்கள். புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக வாக்களித்தார்கள் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசினால் சவால்கள் காணப்பட்ட போதிலும் தேர்தலை உரிய முறையில் ஒழுங்காக நடத்தியமைக்காக பாராட்டுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும்போது இலங்கை அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சி, மனித உரிமைகளை கடைபிடித்தல், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை கடைப்பிடித்தல், நாட்டின் இறைமையை பாதுகாத்தல் ஆகிய வாக்குறுதிகளை பின்பற்றும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது என தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆர்வமாக உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment