மட்டக்களப்பிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள கன்னி அமர்விலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அமர்வுகளிலும் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் பிரதிவாதிக்கு உள்ள அடிப்படை உரிமைகளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய ஆட்சேபனை இல்லை என வழக்குத்தொடுநர் சார்பில் ஆஜராகிய அரச சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் ஒருவரின் தனிப்பட்ட விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக நாளை மறுதினம் இடம்பெறும் கன்னி அமர்வில் விசேட பாதுகாப்பின் கீழ் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ்.சூசைதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment