ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் பலம்மிக்க அரசாங்கத்தை அமைத்து 05 வருடங்கள் சிறப்பான ஆட்சியை முன்னெடுப்போம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை ஹெட்டிபொல பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்கினை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இது எமக்கு மிகவும் முக்கியத்துவம் மிக்க தேர்தலாகும். எதிர்வரும் 05 வருடங்களுக்கு யார் ஆட்சிமைக்கப் போகிறார்கள் என்பதற்கு மக்கள் ஆணை வழங்கும் தினமாகும். பெரும்பாலான மக்கள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
எனவே இம்முறை தேர்தலில் அதிகூடிய வாக்குகளால் நாம் பாரிய வெற்றி பெறுவோம். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் .
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் பலம்மிக்க அரசாங்கத்தை அமைத்து 05 வருடங்கள் சிறப்பான ஆட்சியை முன்னெடுப்போம். தேர்தல் நிறைவடைந்தவுடன் பாராளுமன்றம் கூட்டப்படுவதோடு, அமைச்சரவை நியமனங்களோடு எமது வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.
.
குறிப்பாக கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமைதியானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு காரணமான சுயாதீன தேர்தல்கள்ஆணைக்குழுவிற்கும், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினருக்கும் , ஏனைய அரச அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment