Ads (728x90)

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்:

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 1,12,967  வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை  தமிழ் காங்கிரஸ் 55,303 வாக்குகளுடன் 01ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 49,373 வாக்குகளுடன் 01ஆசனத்தையும்,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  45,797 வாக்குகளுடன் 01 ஆசனத்தையும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 35,927  வாக்குகளுடன் 01 ஆசனத்தையும்  கைப்பற்றியுள்ளன.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 5,71,848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த  நிலையில்  3,94,136 பேர்  மட்டுமே வாக்களித்துள்ளனர். அதில்  3,59,130  வாக்குகள் செல்லுபடியான நிலையில் 35,006  வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் பெறப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை:

இலங்கை தமிழ் அரசு கட்சி 03ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 01ஆசனம்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 01ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 01ஆசனம்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 01ஆசனம்

வன்னி தேர்தல் மாவட்டம்:

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 69,916 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 42, 524 வாக்குகளுடன் 01 ஆசனத்தையும்,  ஐக்கிய மக்கள் சக்தி 37,883 வாக்குகளுடன் 01 ஆசனத்தையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 11,310 வாக்குகளுடன் 01 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். மன்னார், வவுனியா, முல்லைதீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை  உள்ளடக்கியதே வன்னி தேர்தல் மாவட்டமாகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக  2,68,034 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் இம்முறை தேர்தலில்  2,24,856 பேர் வாக்களித்துள்ளனர். இதில் 17,019 வாக்குகள் நிராகரிக்கப்ப்ட்டுள்ளன. ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் 2,07,837 ஆகும்

திருகோணமலை தேர்தல் மாவட்டம்:

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 86,394 வாக்குகளை பெற்று 02 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன  68,881  வாக்குகளை பெற்று 01 ஆசனத்தினையும், இலங்கை தமிழரசு கட்சி  39,570 வாக்குளை  பெற்று  01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

திருமலை மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 2,88,868 ஆகும். அளிக்கப்பட்ட வாக்குகள் 2,27,117 ஆகும். அதில்   14,125  வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. செல்லுபடியான வாக்குகள் 2,12,992 ஆகும்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்:

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பில் 79,460 வாக்குகளை  பெற்று 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள்   67,692 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன    33,424 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும்  கைப்பற்றியுள்ளது. 

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட  4,09,808 வாக்குகளில் 3,14,850 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,98,012 வாக்குகள்      செல்லுபடியான நிலையில் 16,838  வாக்குகள்  நிராகரிக்கப்பட்டுள்ளன.

திகாமடுல்லை தேர்தல் மாவட்டம்:

திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  1,26.012 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை          கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி  1,02,274 வாக்குகளுடன் 02  ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43,319 வாக்குகளுடன் 01 ஆசனத்தினையும், தேசிய காங்கிரஸ் 38,911 வாக்குகளுடன் 01 ஆசனத்தினையும் வென்றுள்ளது.

இத்தேர்தல் மாவட்டத்தில் 5,13,979  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் அதில் 4,02,344 பேர்  வாக்களித்துள்ளார்கள். அதில் 3,85,997  வாக்குகள் செல்லுப்படியான நிலையில் 16,347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget