Ads (728x90)

09ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பதில் சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவையும், குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் ராமநாதனையும் நியமிக்கவும் ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் சபைத் தலைவராக தினேஷ் குணவர்தனவையும், தலைமை அரசாங்க கொறடாவாகவும் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவையும் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget