எவ்வித அடிப்படையுமின்றி துறைமுகத்தை அண்மித்து நெருக்கடியை உருவாக்குவதற்கு ஒரு தரப்பினர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஸ குறிப்பிட்டார். அவ்வாறானவர்களால் தம்மை பயமுறுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன ஊடாக பொதுத்தேர்தலில் போட்டியிடும் பதுளை மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த பதுளைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, மஹியங்கனை மகாவலி மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.
எவ்விதத் தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கான பயணத்தை நிறுத்தப் போவதில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் நன்மைகளை சிந்திக்கும் தலைவர் ஒருவர் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு இடையூறு விளைவிப்பதே சூழ்ச்சி மற்றும் அடிப்படைவாத குழுக்களின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment