தடுப்பூசி புடின் மகளுக்கு போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இச்சாதனையை படைத்துள்ளது. செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு அனுமதியை ரஷ்ய சுகாதாரத்துறை வழங்கியுள்ள நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை வழங்கிய முதல் நாடாக ரஷ்யா பதிவாகிள்ளது.
பாதுகாப்பு மற்றும் செயல்திறனைப் பரிசோதிப்பதற்கான மருத்துவ பரிசோதனைகளின் இறுதிக் கட்டம் தொடர்ந்தாலும், இது ரஷ்யாவிலுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவதற்கு வழிவகுத்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி சோதனை கட்டமாக பொதுமக்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவிடம் தடுப்பூசி குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட புட்டின். "இது மிகவும் திறம்பட செயல்படுகிறது" என்பதும், "நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது" என்பதும் தனக்குத் தெரியும் என்கின்றார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் 20 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் உருவாக்கப்படுகின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி குறைந்தது நான்கு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment