Ads (728x90)

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 270 பேர் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர்.

வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 6,626 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 2,234 பேரும், மன்னார் மாவட்டத்திலிருந்து 1,830 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1,322 பேரும், வவுனியா மாவட்டத்திலிருந்து 1,258 பேரும் தேர்வாகியுள்ளனர்.

இவ்வாறு தேர்வானவர்களிற்கு முதலில் இரு வாரகால விளக்கப் பயிற்சியும் அதன் பின்பு 6 மாதகால செயல்முறை பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் 22,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இந்த நியமனத்திற்கான தேர்வுகள் மூன்று மாதங்களின் முன்பே நிறைவு செய்யப்பட்டபோதும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget