தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது மீண்டும் பாராளுமன்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துதல்களை தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment