Ads (728x90)

உணவே மருந்து என்பது பழமொழி. சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவுகளே நம் ஆரோக்கியத்துக்கு கேடாய் அமைந்து விடுகின்றது. அது இல்லாமல் சிலவகை காய்கறிகள், பழ வகைகளுக்கு நம் உடல் ஆரோக்கியத்தை சீர் செய்து நம்மை அழகாக்கும் சக்தியும் உண்டு.

அப்படியான ஒரு வகை பழம் தான் ‘மங்குஸ்தான்’. இது சாதாரண நேரங்களில் பழக்கடைகளிலோ, சந்தைகளிலோ கிடைக்காது. இது வெளியே அடர்த்தியான ஊதா நிறத்திலும், உள்பகுதியில் வெண்மையான சதைப்பகுதியையும் கொண்டிருக்கும்.

இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் இருக்கும் கொழுப்பை கணிசமாக குறைத்துவிடும். இதில் இருக்கும் சாந்தோன்கள் என்னும் பொருளே கொழுப்பைக் கரைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இந்த பழம் புற்றுநோய் ஆராய்ச்சியிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்கு காரணம் இதில் இருக்கும் அழற்சி, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்தான். இதை அடிக்கடி சாப்பிட்டால் உங்கள் தொப்பை காணாமல் போய்விடும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget