வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் வைத்து இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் 15 வயது ரமணன் திவ்வியநாதன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இம்மாணவனின் உறவினர்களான சசிகுமார் மற்றும் பிரேமநாதன் ஆகிய இருவரும் பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மாணவனின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதன் போது செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
இதன் போது ஜனாதிபதி இந்த வாள் வெட்டு குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளிடம் இருக்கும் வாள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோசங்களை முன்வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment