மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்த விபரங்களை தருமாறும், எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன் பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சுகளும், திணைக்களங்களும் அனுமதி வழங்கும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் எனது இணை அனுசரணையுடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். பிரதேச செயலகத்தில் பொருத்தமான அலுவலக இடமொன்றை ஒதுக்கி தருமாறும் பிரதேச செயலாளரை அங்கஜன் இராமநாதன் கேட்டுக் கொண்டுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment